கூட்டுறவு வங்கிகளுக்கும் ஆப்பு வைக்கும் மத்திய அரசு

கூட்டுறவு வங்கிகள் இதுவரை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த நிலையில் அந்த வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வதற்கான ஏற்பாடுகளை கடந்த சில மாதங்களாக மத்திய பாஜக அரசு செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நாளை முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக நாளை பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

கூட்டுறவு வங்கிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

இவ்வாறு கொண்டுவந்தால் பஞ்சாப் அண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ஏற்பட்ட முறைகேடு போல் இனி எந்த வகையிலும் எந்த வங்கியிலும் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது

Leave a Reply