மழை ஆய்வுக்கு நடுவே மணமக்களுக்கு ஆசி வழங்கிய முதல்வர்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மழை குறித்த ஆய்வு செய்து கொண்டிருந்தபோது புதியதாக திருமணம் செய்த மணமக்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

சென்னையை சேர்ந்த கௌரி சங்கர் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் இன்று திருமணம் செய்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் கொட்டும்
மழையில் ஆசி பெற்றனர்.

இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.