தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உள்பட முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்க தமிழக முதல்வர் இன்று ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று சுமார் பத்தாயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்திருப்பதாகவும் இதனையடுத்து இன்று முதல்வர் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த ஆலோசனைக்கு பின் இரவு நேர ஊரடங்கு உள்பட ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply