கர்நாடகா, ஆந்திராவில் ஒமிக்ரான்: தமிழக முதல்வர் அவசர ஆலோசனை!

ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து தமிழகத்தில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை செய்ய உள்ளார்.

மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் இன்று நடைபெறும் ஆலோசனைக்குப் பின்னர் ஊரடங்கு நீடிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு முதல்வர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 15ஆம் தேதி முடிவடைகிறது என்பது தெரிந்ததே.