சென்னையில் மட்டும் முழு ஊரடங்கா? முதல்வர் இன்று அறிவிக்க வாய்ப்பு!

தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழக அரசு பிறப்பித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ஆம் தேதியான இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு நீடிப்பது மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை செய்ய உள்ளார்

இன்றைய ஆலோசனையில் கொரோனா மிக வேகமாக பரவி வரும் சென்னையில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் முதல்வரின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்.