பீகாரில் பாஜக கூட்டணி தற்போது அபார வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது

கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் நிதிஷ்குமார் கட்சி 115 இடங்களில் போட்டியிட்டு வெறும் 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது

ஆனால் அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி 110 இடங்களில் போட்டியிட்டு 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எனவே முதல்வர் பதவியை பாஜக தக்க வைத்துக் கொள்ளும் என்றும் நிதிஷ் குமாரை முதல்வர் பதவியில் இருந்து கழட்டி விடும் வாய்ப்பு இருப்பதாகவும் பீகாரில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன

Leave a Reply