ஊரடங்கு நீட்டிப்பா?

மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை செய்யவிருப்பதாகவும், இந்த ஆலோசனைக்கு பின் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

வரும் 29ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்ய திட்டமிட்டுள்ளார். மே 31 ஆம் தேதியுடன் 4ஆவது கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில் இந்த ஆலோசனையை அவர் நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த ஆலோசனை ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் மேலும் சில தளர்வுகள் அறிவிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. மேலும் சென்னைக்கும் சில தளர்வுகளை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

 

Leave a Reply