அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கேற்ப நாம் ஒவ்வொருவரும் நமது முகத்தை அழகாக வைத்துக் கொள்ளவே ஆசைப்படுகின்றோம். இன்று பல அழகு நிலையங்கள் வந்த போதிலும், அவற்றில் கட்டணங்கள் அதிகமாக இருக்கின்றன. அதனால் நாம் வீட்டிலேயே இயற்கையான முறையில் சிக்கனமாகவும், நம்மை அழகுப்படுத்திக் கொள்ளலாம்.

உருளைக்கிழங்கு
கரும்புள்ளிகளை நீக்குவதற்கு முதலில் தேவைப்படுவது உருளைக்கிழங்கு தான். அதில் கருப்பு மற்றும் பச்சை நிறப் புள்ளிகள் இல்லாதவாறு இருக்க வேண்டும். பின் உருளைக்கிழங்கை சீவிக் கொள்ளவும். பின்பு அதனை கரும்புள்ளிகள் மீது 10 நிமிடங்கள் தேய்க்கவும். காய்ந்த பின்பு முகத்தை கழுவவும்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றினை முகத்தில் தடவினால் கரும்புள்ளிகளை நீக்குவது மட்டுமல்லாமல், அதிகப்படியான எண்ணெய்ப் பசை சருமத்தில் இருந்தும் விடுபடலாம்.

சர்க்கரை
ஒரு மேஜை கரண்டி சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து, அதனை மூக்கிலும் கன்னத்திலும் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவினால், அவை குறையக்கூடும். அதுமட்டுமின்றி இந்த கலவை சருமத்தை பளிச்சிட செய்யவும் உதவும்.

தயிர்
2 மேஜை கரண்டி தயிருடன், 2 மேஜைகரண்டி ஓட்ஸ் பொடி மற்றும் 2 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இதனை கரும்புள்ளிகள் மீது தடவி 10 நிமிடங்கள் காய விடவும். பின்னர் முகத்தை அலம்பவும், இது நல்ல பலனைத் தரும்.

ஆலிவ் ஆயில்
சிறு துளி ஆலிவ் எண்ணெயுடன், எலுமிச்சை சாறு சேர்த்து உபயோகித்தால், அது கரும்புள்ளிகளை நீக்கும். இதனை முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது சில நிமிடங்கள் தடவி காய வைக்கவும். பின்னர் முகத்தை அலம்பவும்.

ஆயில் மசாஜ்
ஆலிவ் எண்ணெயை கொண்டு முகத்தை அடிக்கடி மசாஜ் செய்து வரவும். இது கரும்புள்ளிகள் வராமல் தடுக்க உதவும். அதனால் முகத்தில் ஆலிவ் எண்ணெயை தடவி கரும்புள்ளிகள் வராமல் தடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக முகத்தில் ஆலிவ் எண்ணெயை தடவி, சூடான நீரில் நனைத்த துணியை முகத்தில் மூடி 15 நிமிடங்கள் காய வைக்கவும். இதனால் இந்த வெதுவெதுப்பான துணி சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி, கரும்புள்ளிகளை தளர்வடையச் செய்யும்.

ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை தினமும் சுத்தம் செய்யவும். இது கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் வராமல் தடுக்கும்.

உப்பு நீர்
கருவளையங்கள் வராமல் இருக்க, முகத்தை தினமும் உப்பு நீரால் சுத்தம் செய்யவும்.

தக்காளி சாறு
தக்காளிச் சாற்றினை முகத்தில் 20 நிமிடங்களுக்கு ஊற வைத்தால், கரும்புள்ளிகளில் இருந்து விடுபடலாம்.

கற்றாழை
கற்றாழைச் சாற்றினை முகம், கன்னங்கள் மற்றும் மூக்கு பகுதிகளில் தடவி ஊற வைத்து கழுவினால், கரும்புள்ளிகளில் இருந்து விடுபடலாம்.

Leave a Reply