பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் சிட்டிபாபு. நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவர் சில தினங்களுக்கு முன் வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை முகப்பேரில உள்ள தனியார் மருத்துவமனையில சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் கோமா நிலைக்கு சென்றார். பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகலில் சிட்டிபாபு மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று மாலை சைதாப்பேட்டையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. காலமான சிட்டிபாபுக்கு ஜரீனா என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

Leave a Reply