நாடு முழுவதும் குடியுரிமை சட்டம் அமல்: என்ன செய்ய போகின்றன எதிர்க்கட்சிகள்?

குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் நேற்று முதல் அமலானதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதால் எதிர்க்கட்சிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்படி குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளித்தார். அதனையடுத்து குடியுரிமை திருத்தச் சட்ம் ஜனவரி 10ஆம் தேதி முதல் அமலாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலானதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதால் எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது

Leave a Reply