குடியுரிமை சட்டம் ஏன்? மாநிலங்களவையில் அமித்ஷா ஆவேசம்

உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தின் மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்தார். இந்த மசோதாவிற்கு 330 எம்பிக்கள் வாக்குகள் கிடைத்ததை அடுத்து வெற்றிகரமாக மக்களவையில் நிறைவேறியது

இதனை அடுத்து இந்த மசோதாவை இன்று அவர் மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் விளக்கம் அளித்து பேசிய போது ’நாங்கள் இந்த சட்டத்தை வாக்கு வங்கிக்காக செய்யவில்லை என்றும், நாங்கள் இந்த சட்டத்தை லோக்சபா தேர்தலுக்கு முன்பே கொண்டுவர முயற்சித்தோம், என்றும் எங்களுக்கு வடகிழக்கு மாநில மக்களின் நன்மையே முக்கியம் என்றும் கூறினார். மேலும் பாகிஸ்தான் வங்கதேசத்திலிருந்து சிலர் இந்தியா வந்து நிம்மதியாக இருக்கின்றார்கள் என்றும் அவர் தனது விளக்கத்தில் தெரிவித்தார்

மக்களவைவை அடுத்து மாநிலங்களிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் இன்று மாநிலங்களவையிலும் இந்த சட்டத் திருத்தம் வாக்கெடுப்பில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply