தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: அமித்ஷா விளக்கம்

தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தற்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த சட்டத்தை தாக்கல் செய்யும் முன் இதுகுறித்து மக்களவை உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்தார்,

தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்றும், மசோதாவில் பாகுபாடுகள் எதுவும் காட்டப்படவில்லை என்றும் மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.

இதனையடுத்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க, மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டதிருத்தத்திற்கு வடகிழக்கு மாநிலங்களின் எம்பிக்கள், காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெர்வித்தனர். இருப்பினும் கடும் எதிர்ப்புக்கு இடையே மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனால் மக்களவையில் அமளி ஏற்பட்டது

Leave a Reply