திரைப்பட படப்பிடிப்பில் துப்பாக்கி சூடு: ஒளிப்பதிவாளர் பலி, இயக்குனர் படுகாயம்!

சினிமா படப்பிடிப்பின் போது எதிர்பாராத நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு காரணமாக அந்த படத்தின் இயக்குநர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் பெண் ஒளிப்பதிவாளரும் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

ஹாலிவுட் திரைப்படமான ’ரஸ்ட்’ என்ற படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஆக்சன் காட்சிக்காக ஒரிஜினல் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் நாயகன் துப்பாக்கியால் சுட்டபோது அந்தத் துப்பாக்கியில் இருந்த குண்டு எதிர்பாராதவிதமாக ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் மற்றும் இயக்குனர் ஜோயல் சோசா மீதும் பட்டது. இதனை அடுத்து ஒளிப்பதிவாளர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் இயக்குனர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.