மலேசியாவில் இருந்து தடை செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுக்களை சிங்கப்பூருக்கு கடத்தியதாக 3 தமிழர்களும்,அவர்களுக்கு உதவியாக இருந்த ஒரு தமிழரும் கைது செய்யப்பட்டனர்.

நேற்று மாலை சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து ஒரு பெரிய பார்சலை மூன்று நபர்கள் விமான நிலையத்தில் இருந்து எடுத்துக்கொண்டு சென்றனர். அப்போது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பார்சலை சோதனை செய்தபோது அதில் சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட 999 சிகரெட்டுக்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றின் மொத்த மதிப்பு 14 லட்சம் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக 999 சிகரெட்டுகளுக்கு அந்நாட்டு அரசு தடை செய்யப்பட்டது. ஆனாலும் கள்ள மார்க்கெட்டில் நல்ல விலைக்கு 999 சிகரெட்டுக்களை விற்று பலர் லாபம் செய்து வந்தனர். இந்நிலையில் 999 சிகரெட்டுப் பெட்டிகளை கடத்தியதாக மூன்று தமிழர்களும், இவர்களுக்கு உதவியாக இருந்த விமான நிலைய அதிகாரியான ஒரு தமிழரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் மோகன் அய்யாவ், காசிதேசன் ராமச்சந்திரன், மணிராஜன் அபிமானன், திருச்செல்வம் கிருஷ்ணசாமி என சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் நான்கு பேர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Leave a Reply