shadow

மீனம்பாக்கம் – சின்னமலை மெட்ரோ ரயில் சேவை ஆரம்பம். கட்டணம் எவ்வளவு?

metroசென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை ஏற்கனவே மெட்ரோ ரயில் சேவை இயங்கிவரும் நிலையில் இன்று முதல் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். மேலும் விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலையில் உள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார். இந்த திறப்புவிழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் மெட்ரோ ரயிலில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பயணம் செய்தனர்.

இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டதன் மூலம் இனி கோயம்பேட்டில் இருந்து சென்னை விமான நிலையம் வரை பயணிகள் மிக குறைந்த நேரத்தில் பயணம் செய்ய முடியும். தற்போது கோயம்பேடு – ஆலந்தூர் இடையே தினமும் சராசரியாக 10 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இனி பயணிகள் எண்ணிக்கை தினமும் 15 ஆயிரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் சேவை தொடங்கும் சின்னமலை – விமான நிலையம் இடையிலான மொத்த தூரம் 8.6 கிலோ மீட்டராகும். இதில் 6 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயிலுக்கான கட்டணம் முதல் 2 கி.மீ்ட்டருக்கு ரூ. 10, 2 முதல் 4 கி.மீட்டருக்கு ரூ.20, 4 முதல் 6 கி.மீட்டருக்கு ரூ.30, 6 முதல் 8 கி.மீட்டருக்கு ரூ.40, 8 முதல் 10 கி.மீட்டருக்கு ரூ.50, 10 முதல் 15 கி.மீட்டருக்கு ரூ.60 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தில் சின்னமலை வரை ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும். விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வரை ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும். தெரிகிறது.

Leave a Reply