குட்டை கவுன்களில் வரும் இளம்பெண்களுக்கு சிறப்பு தள்ளுபடி. சீன ரெஸ்டாரெண்ட் அதிரடி அறிவிப்பு.

  restaurantrestaurant 2சீனாவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ரெஸ்டாரெண்ட் ஒன்றில் குட்டைப்பாவாடை, குட்டை கவுன் அணிந்து வரும் பெண்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜினான் நகரில் புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ரெஸ்டாரெண்ட் ஒன்றின் பெயர் ‘யாங் ஜியா ஹாட் பாட்’. இந்த ரென்ஸ்டாரெண்டுக்கு வரும் இளம்பெண்களுக்கு மட்டும் அவர்கள் சாப்பிடும் பில்லுக்கு தள்ளுபடி உண்டு. அவர்களுடைய உடை எந்த அளவுக்கு சிறியதாக இருக்கின்றதோ அந்தளவுக்கு தள்ளுபடியாம்.

ரெஸ்டாரெண்ட்டில் நுழையும்போது ஒருவர் டேப்பை கையில் வைத்துக்கொண்டு பெண்களின் உடையை அளவு எடுப்பார். முழங்காலில் இருந்து மூன்று இன்ச் உயரத்தில் பெண்களின் உடை இருந்தால் அவர்களுக்கு 20% தள்ளுபடி என்று தொடங்கி அதிகபட்சமாக முழங்காலில் இருந்து 13இன்ச் உயரத்தில் உடை இருந்தால் 90% வரை தள்ளுபடி உண்டாம்.

எனவே அதிகபட்ச தள்ளுபடியை பெறுவதற்காக பெண்கள் மிகச்சிறிய குட்டை பாவாடை மற்றும் குட்டை கவுன்களை அணிந்து இந்த ரெஸ்டாரெண்டுக்கு படையெடுப்பதாகவும், இம்மாதிரியான உடைகளில் வரும் பெண்களை பார்ப்பதற்காக ஆண்கள் கூட்டம் படையெடுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சிறப்பு தள்ளுபடி திட்டம் ஆரம்பமானது முதல் இந்த ரெஸ்டாரெண்டில் அளவுக்கு அதிகமான கூட்டம் வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.restaurant 1

Leave a Reply