shadow

modi and wangyiசீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ அவர்கள், டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார்.

 இரண்டு நாள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ, நேற்று முன் தினம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து இருதரப்பு உறவு பேசினார்.

அதன்பின்னர் நேற்று மாலை , பிரதமர் நரேந்திர மோடியை, டெல்லியிலுள்ள அவரது வீட்டில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி  சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின்பொது இருநாட்டு உறவுகள் குறித்தும், பொருளாதார மற்றும் வணிகத்தொடர்புகள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இதன் பின்னர், வாங் இ செய்தியாளர்களிடம் கூறுகையில், ”இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது. மோடி தலைமையில், இந்தியா சிறப்பான வளர்ச்சி பெறும்” என்றார்.

Leave a Reply