ஒரு மீனின் மதிப்பு ரூ.1 கோடி. சீன மீனவர்களிடம் சிக்கியது

ஒரு மீனின் மதிப்பு ரூ.1 கோடி. சீன மீனவர்களிடம் சிக்கியது

சீனாவில் கடந்த ஞாயிறு அன்று மீன் பிடிக்க சென்ற ஒரு குழுவுக்கு மிகவும் அரிதான மீன் ஒன்று கிடைத்துள்ளது. 47 கிலோ எடை கொண்ட இந்த மீன் 5 அடி 2 இன்ச் அளவில் உள்ளது.

குரோக்கர் என்று அழைக்கப்படும் இந்த மீன் மிகவும் அரிதிலும் அரிதானது என்பதால் ரூ.1 கோடி வரை விலைபோகும் என்று கூறப்படுகிறது. இந்த மீனை வலையில் இருந்து படகில் எடுத்து போடவே ஐந்து பேர் தேவைப்பட்டுள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக மீன்பிடி தொழிலில் இருந்து வருவதாகவும், இவ்வளவு பெரிய மீனை இதுவரை தான் பார்த்ததுகூட இல்லை என்றும் இந்த மீனை பிடித்த குழுவில் இருந்த ‘சென்’ என்பவர் கூறியுள்ளார்.

fish-2 fish-3 fish fish1

Leave a Reply