ஒரே ஒரு நிமிடத்தில் 25 டன் மீன்களை இழந்த மீன்பண்ணை உரிமையாளர்

ஒரே ஒரு நிமிடத்தில் 25 டன் மீன்களை இழந்த மீன்பண்ணை உரிமையாளர்
china
சீனாவை சேர்ந்த மீன் பண்ணை உரிமையாளர் தான் ஆசை ஆசையாக வளர்த்து வந்த 25 டன் மீன்களை ஒரே ஒரு நிமிடத்தில் இழந்த பரிதாப சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது.

தெற்கு சீனாவை சேர்ந்த Yang என்பவர் குளம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் விதவிதமான மீன்களை வளர்த்து வந்தார். சுமார் 25 டன்கள் மீன்கள் அவரது மீன் பண்ணையில் வளர்ந்து வந்தது.

இந்நிலையில் குளத்தின் ஒரு பகுதியில் திடீரென ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. 16 அடி அகலத்தில் ஏற்பட்ட இந்த பள்ளத்தில் அந்த குளத்தின் தண்ணீர் முழுவதும் கிட்டத்தட்ட போய்விட்டது. அதுமட்டுமின்றி அவர் ஆசை ஆசையாக வளர்த்து வந்த 25 டன் மீன்களும் அந்த பள்ளத்தில் விழுந்துவிட்டது. தற்போது அந்த மீன்களும், தண்ணீரும் எங்கே போனது என்று தெரியாமல் குளம் இருந்த இடமே தரை போன்று காட்சி அளிக்கின்றது. ஒரே நிமிடத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் மீன் பண்ணை உரிமையாளர் Yang அவர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

திடீரென குளத்தில் ஏற்பட்ட பள்ளம் குறித்து புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

Chennai Today News: Chinese farmer loses 25 tonnes of fish within one minute

Leave a Reply