சீனா மற்றும் ரஷ்ய நாடுகளை இணைக்கும் மிகப்பெரிய ரயில் பாலம் ஒன்றிற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று தொடங்கப்பட்டது.

சமீபத்தில் சீனா மற்றும் ரஷ்யா  நாடுகள் இணைந்து வருடத்திற்கு 21 மில்லியன் டன் சரக்குகளை பரிமாற்றும் செய்யும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. சரக்குகள் போக்குவரத்தை எளிமையாக்க சீன ரஷ்யாவை இணைக்கும் அமூர் என்ற ஆற்றின் குறுக்கே மிக பிரமாண்டமான பாலம் ஒன்றை அமைக்க இருநாடுகளும் கூட்டாக முடிவு செய்தது.

இந்த பாலத்தின் நீளம் மொத்தம் 2215 மீட்டர் என்றும் அதில் 1900 மீட்டர் சின எல்லையிலும், 315 மீட்டர் ரஷ்ய எல்லையிலும் இருக்கும்படி அமைக்கப்படவுள்ளது. ஐந்து வருடங்களில் கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டிருக்கும் இந்த பாலத்தின் தொடக்கவிழா நேற்று இருநாட்டு அதிகாரிகளின் முன்னிலையில் சிறப்பான முறையில் நடந்தது.

இந்த பாலத்திற்காக மொத்தம் 431 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

 

Leave a Reply