shadow

ஓடும் ரயில்களில் முத்தம் கொடுக்க தடை. சீனா போலீசார் அதிரடி அறிவிப்பு

kissசீனாவில் இயங்கி வரும் மெட்ரோ ரயில், சுரங்க ரயில்களில் செல்லும் காதலர்கள் தங்களுக்குள் சல்லாபத்தில் ஈடுபட்டு கொண்டும், முத்தம் கொடுத்து கொண்டும் இருப்பதால் மற்ற பயணிகள் இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் புகார் கொடுத்து வந்தனர். ஆனால் ரயில்வே அதிகாரிகள் இதுகுறித்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காததால் கடுப்பான பயணிகள் தற்போது காமக்களியாட்டத்தில் ஈடுபடும் ஜோடிகளை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து ஆன்லைனில் பதிவு செய்து வருகின்றனர்.

இதனால் இந்த பிரச்சனை விபரீதம் அடைவதை காலதாமதமாக புரிந்து கொண்ட சீனாவின் ரயில்வே காவல்துறையினர் தற்போது  ஒரு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதன்படி மெட்ரோ மற்றும் சுரங்க ரெயில்களில் முத்தமிட்டு காமலீலைகளில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு பலகைகளும் அனைத்து ரயில்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து, சுரங்க ரெயில்களில் முத்தமிடுபவர்கள் ஜாக்கிரதையாக இருங்கள். போலீசார் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறார்கள் என கிண்டல் செய்து ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது

Leave a Reply