3 தொலையுணர்வு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது சீனா

சீனா அனுப்பிய 3 செயற்கைக்கோள்களும் அவற்றுக்கான சுற்றுப்பாதையில் நுழைந்தன.

பீஜிங், சீனா நேற்று உள்ளூர் நேரப்படி காலை 10.22 மணிக்கு மார்ச்-2டி ராக்கெட் மூலம் 3 தொலையுணர்வு செயற்கைக்கோள்களை சிச்சுவான் மாகாணத்தில் ஜிசாங்க் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து அதிரடியாக விண்ணில் செலுத்தியது.

3 செயற்கைக்கோள்களும் அவற்றுக்கான சுற்றுப்பாதையில் நுழைந்தன. இந்த செயற்கைக்கோள்கள் அறிவியல் சோதனைகள், நிலவள ஆய்வுகள், விவசாய உற்பத்தி பொருட்களின் விளைச்சல் மதிப்பீடு, பேரிடர் தடுப்பு மற்றும் குறைப்புக்கு பயன்படுத்தப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

சீனாவில் மார்ச் வரிசை ராக்கெட்டின் 424-வது விண்வெளி திட்டம் இதுவாகும். சீனா கடந்த ஆண்டு நவம்பர் 6-ந் தேதி, மூன்று யாகான்-35 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது.