உலகின் மிகப்பெரிய அதிவேக ரயில் போக்குவரத்தை தன்னகத்தே வைத்துள்ள சீனாவில் ஒரு மிகப்பெரிய பாலம் ஒன்றின் 17000 டன் எடையுள்ள பகுதியை 90 நிமிடத்தில் இணைத்து சீன பொறியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சீனாவில் வூஹான் நகரத்தில் ரயில்வே லைனுக்கு மேலாக கட்டிவரும் மிகப்பிரமாண்டமான பாலம் ஒன்றின் ஒரு பகுதி மட்டும் ரயில் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இன்றி தனியாக உருவாக்கப்பட்டு அதன் பின்னர் மெயின் பாலத்துடன் இணைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது. சீன பொறியாளர்கள் அந்த பாலத்தின் இடைப்பட்ட பகுதியை 90 டிகிரி அளவுக்கு வெறும் 90 நிமிடத்தில் திரும்பி, மெயின் பாலத்துடன் இணைத்து சாதனை செய்யப்பட்டது. சீனாவில் இதுபோன்ற முறையில் மிகப்பெரிய பாலத்தின் பகுதியை இணைப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாலம் போக்குவரத்துக்கு மிக விரைவில் திறக்கப்பட உள்ளதாக சீன ரயில்வே துறை அறிவித்துள்ளது

Leave a Reply