குழந்தைகளுக்கான நோபல் பரிசு பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. என இந்த விருது கமிட்டி தலைவர் லிவ் ஜெய்ல்பர்க் நேற்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் பெண் கல்விக்காக உரிமை போராட்டம் நடத்திய சிறுமி மலாலாவை தலிபான்கள் கடந்த 2012ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டார்கள். படுகாயம் அடைந்த மலாலா, பின்னர் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார். அதன்பின்னர் உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளின் உரிமைக்காக அவர் போராட முடிவு செய்தார்.

அவருடைய சேவையை பாராட்டி, ஐரோப்பிய யூனியனின் மிக உயரிய விருதான ஷெக்ரோவ் மனித உரிமை விருது வழங்கப்பட்டது. தற்போது குழந்தைகளின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் உலக குழந்தைகள் பரிசுக்கு மலாலாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

மலாலாவின் சேவையை அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட உலகத்தலைவர்கள் பலர் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply