shadow

4,694 இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு:

குழந்தைகள் சம்பந்தமான பாலியல் இணையதளங்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுசம்பந்தமான 4,694 இணையதளங்களை முடக்க மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரங்கள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற குற்றச் செயல்களுக்கு குழந்தைகள் வீடியோக்கள் அடங்கிய பாலியல் இணையதளங்கள் முக்கிய காரணமாக விளங்குகிறது என்று கூறப்படுகிறது. இதனைத் தடுக்க மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதாவது, 4,694 குழந்தைகள் ஆபாச இணையதளங்கள் முடக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பல்வேறு நீதிமன்றங்களின் உத்தரவுப்படி, 2,133 இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனை, மக்களவையில் பேசிய போது, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

Leave a Reply