பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை

mk stalin 1200

ராமநாதபுரம்; பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

114-வது தேவர் ஜெயந்தியையொட்டி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

முதலமைச்சர் முக ஸ்டாலினை அடுத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்

இந்த நிலையில் நாட்டின் விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் அயராது பாடுபட்ட முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 114-வது பிறந்தநாளான இன்று, அவரை நினைவு கூர்வோம் என கனிமொழி எம்பி டுவிட் செய்துள்ளார்.