shadow

வாடகைத்தாய் மூலம் பிறந்த குழந்தைக்கு ‘சிகாகோ’ என பெயரிட்ட கிம் கார்தஷியன்

அமெரிக்காவின் பிரபல நடிகை கிம் கார்தஷியன் – கென்யே வெஸ்ட் ஜோடிக்கு கடந்த திங்கட்கிழமை வாடகைத்தாய் மூலம் பெண் குழந்தை பிறந்தது. மூன்றாவதாக பிறந்த இந்த குழந்தைக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான சிகாகோ பெயரை இந்த தம்பதிகள் வைத்துள்ளனர்.

இது குறித்த அறிவிப்பை கிம்கார்தஷியன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். பெயருக்கான காரணத்தை அவர் கூறவில்லை என்றாலும் சிகாகோ நகரம் அவருக்கு சிறுவயது முதலே பிடித்த நகரம் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் தனது முதல் குழந்தைக்கு நார்த் எனவும் இரண்டாவது குழந்தைக்கு செயிண்ட் எனவும் பெயரிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கென்யே வெஸ்ட் சிகாகோவில் வளர்ந்தவர் என்பதால் இந்த பெயர் வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான இந்த நட்சத்திர ஜோடி குழந்தை பிறந்ததை கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply