செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா- இயக்கும் விக்னேஷ் சிவன்.!!

செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்த மாதம் நடைபெறுகிறது. அதற்கான துவக்க விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

அந்த விழாவை தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகை நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒருங்கிணைக்கிறார்.