shadow

CheranC2HLaunch_15714_17திருட்டு விசிடி முறையை அடியோடு ஒழிக்க இயக்குனர் சேரன் அறிமுகப்படுத்தும் ஒரு புதிய முறைதான் “சினிமா டு ஹோம்” என்பது. இதன் மூலம் சினிமாவுக்கும் மக்களுக்கும் இடையே இருக்கும் தூரத்தை குறைத்திருக்கிறார் இயக்குநர் சேரன்

முதலில் C2H என்ற நிறுவனத்தை தொடங்கிய சேரன் தமிழ்நாடு முழுவதும் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில் திருட்டு விசிடிக்கள் கோயம்புத்தூர், சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் இருந்து தான் தயாரிக்கப்படுவதாகவும், அங்கிருந்துதான் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதையும் மேலும் இந்த பகுதியில் இருந்துதான் இணையத்திலும் அப்லோட் செய்யப்படுகிறது என்றும் கண்டுபிடித்துள்ளார்.

திருட்டு விசிடி தயாரிக்கும் கும்பல் ஒருவருடன் ரகசியமாக பேசிய சேரன், ஒரு படம் ரிலீஸ் ஆனவுடன் அதை முதலில் 10லட்சம் பிரிண்ட் போட்டு தமிழ்நாடு முழுவதும் அனுப்படுகிறது என்றும் பின் அது நன்றாக ஓடினால் இன்னும் 15லிருந்து 20 லட்சம் சிடிக்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிந்துகொண்டார். இதன் மூலம் திருட்டி விசிடி கும்பல் ஒரே வாரத்தில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல்,விஜய் போன்ற பெரிய ஹிரோக்கள் படங்கள் தான் அவர்களுக்கு நல்ல லாபத்தை தருகிறதாம். குறிப்பாக ஜில்லா படம் 80 லட்சம் பிரிண்ட்கள் ஓடியதாகவும், இதன் மூலம் திருட்டு விசிடி தயாரிக்கும் கும்பலுக்கு ரூ.4 கோடி லாபம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த திருட்டுத்தனத்தை ஒழிக்கவே சினிமா டு ஹோம் என்ற புதிய முறையை கொண்டுவந்துள்ளதாகவும், இதற்கு சினிமாத்துறையினர்களும், பொதுமக்களும் ஆதரவு தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1mK3OSH” standard=”//www.youtube.com/v/mhgKHPGHUb4?fs=1″ vars=”ytid=mhgKHPGHUb4&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep2719″ /]

Leave a Reply