shadow

TNPL கிரிக்கெட் போட்டி: சேப்பாக் கில்லிஸ் அணிக்கு சூப்பர் வெற்றி


1தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் TNPL கிரிக்கெட் போட்டியின் 12வது ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி, ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணியுடன் மோதியது.

டாஸ் வென்ற காஞ்சி அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் சேப்பாக் கில்லிஸ் அணியின் அதிரடி பந்துவீச்சு காரணமாக 13 ஓவர்களில் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் கில்லிஸ் 11.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 103 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 50 ரன்கள் அடித்த சேப்பாக் கில்லிஸ் அணியின் சரவணன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

cricket1

Leave a Reply