சரத்குமாரின் ‘சென்னையில் ஓர் நாள் 2’ படத்தின் சென்சார் ரெடி

சரத்குமாரின் ‘சென்னையில் ஓர் நாள் 2’ படத்தின் சென்சார் ரெடி

கடந்த 2013ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘சென்னையில் ஓர் நாள்’ நல்ல வெற்றியை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் டெக்னிக்கல் பணிகள் கடந்த வாரம் முற்று பெற்ற நிலையில் தற்போது இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது

‘சென்னையில் ஓர் நாள் 2’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘UA’ சர்டிபிகேட் அளித்துள்ளனர். சென்சார் சர்டிபிகேட் கிடைத்துவிட்டதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என தெரிகிறது. மேலும் இந்த படம் 101 நிமிடங்கள் மட்டுமே ஓடும் சிறிய படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரத்குமார், நெப்போலியன், அஜய், சுஹாசினி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேபிஆர் இயக்கியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சென்னையில் ஓர் நாள் முதல் பாகத்தை போலவே இந்த இரண்டாம் பாகமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply