shadow

ஓலாவுக்கு போட்டியால களமிறங்கிய சென்னையில் ஓடிஎஸ்

09பிரபல கேப் சர்வீஸ்களான ஓலா, ஊபருக்குப் போட்டியாக சென்னை ஓட்டுநர்கள் ‘ஓடிஎஸ்’ என்ற புதிய கேப் சர்வீஸை தொடங்கியுள்ளனர்.

ஓலா, ஊபர் போன்ற சர்வதேச கேப் சர்வீஸ் நிறுவனங்கள், சென்னையிலும் இப்போது மிக சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. இதில், தினமும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

ஆனால், இந்த சேவைகள் முக்கியமான மாலை நேரங்கள் மற்றும் காலை நேரங்களில், சாதாரண கட்டணத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக பணம் வசூலிக்கின்றன. அதேபோல், அதை ஓட்டும் ஓட்டுநர்களிடமும் அதிக பணத்தை கமிஷனாக பிடுங்குவதாக கூறி, ஓட்டுநர்கள் கடந்த காலங்களில் போராட்டங்களும் நடத்தினர்.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ஓட்டுநர்கள் ஒன்றாக சேர்ந்து ஓடிஎஸ் (OTS-ஓட்டுநர்கள் தோழர்கள் சங்கம்) என்ற புதிய கேப் சேவையைத் தொடங்கியுள்ளனர். இது குறித்து அதன் நிர்வாகிகளிடம் சமயம் தமிழ் தொடர்புகொண்டு பேசியபோது, “இதில் ஓலா, ஊபரைப் போல் அல்லாமல் எல்லா நேரங்களிலும் ஒரே கட்டணமே வசூலிக்கப்படும். மற்ற நிறுவனங்கள் ஓட்டுநர்களிடம் 20% வருமானத்தையும் ஜிஎஸ்டியையும் பிடித்துக்கொள்கின்றன. ஆனால், ஓடிஎஸ் சேவையில் ஓட்டுநர்களிடம் 7% கமிஷனும், 5% ஜிஎஸ்டியும் பிடிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசுகையில், ஓடிஎஸ்ஸில் ஆட்டோ, மினி, சீடன், எஸ்யுவி என அணைத்து விதமான வண்டிகளும் இயக்கப்படுகின்றன. மினியில் 4 கி.மீக்கு 80 ரூபாயும், சீடனில் 4 கி.மீக்கு 100 ரூபாயும், எஸ்யுவியில் 4 கி.மீக்கு 80 ரூபாயும் 200 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது இந்த ஓடிஎஸ் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில், இந்த சேவையில் 1000 ஓட்டுநர்கள் இணைந்துள்ளனர். இதில், வாகனங்களை புக் செய்ய வாடிக்கையாளர் அவர்களின் ‘OTS’ அப்பைப் பயன்படுத்தலாம், அல்லது ‘4003 4003’ என்ற எண்ணை அழைக்கலாம்.

இந்த ஓடிஎஸ் கேப் செயலியை டவுன்லோடு செய்ய இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்

//play.google.com/store/apps/details?id=com.otscabs

Leave a Reply