15

இன்று அதிகாலை மலேசியா தலைநகரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு சென்ற விமானம் வியட்நாம் கடலில் விழுந்து 239 பேர் வரை பலியானார்கள் என்ற அதிர்ச்சியான செய்தியை பார்த்தோம். தற்போது பலியானவர்களில் ஐந்து பேர் இந்தியர்கள் என்றும், அந்த ஐந்து பேர்களில் ஒருவர் சென்னையயை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை வேளச்சேரியை சேர்ந்த சந்திரிகா சர்மா என்பவர் இந்த விமானத்தில் பயணம் செய்தார் என்றும் அவரது நிலை குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. சந்திரிகா சர்மாவை தவிர மேலும் நான்கு இந்தியர்களான  சேத்னா கொலேகர், சுவனந்த் கொலேகர், சுரேஷ் கொலேகர், பிரகலாத் ஷிர்சதா, ஆகியோர் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த சந்திரிகா சர்மா, 51 வயது உடையவர் என்றும், சென்னையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உறுப்பினர் என்பதும் தெரிய வந்துள்ளது. சென்னையில் கணவருடன் வசித்து வரும் இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார்.சீனாவில் நடைபெறும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அவர் இந்த விமானத்தில் மலேசியாவில் இருந்து பயணம் செய்துள்ளார். மலேசிய விமானம் விபத்துக்க்குள்ளான செய்தி தெரிந்ததும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெரும் கவலையில் இருக்கின்றனர்.

Leave a Reply