shadow

1aஐ.பி.எல் 7 தொடர் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை அணியின் வெற்றி தொடர்கிறது. நேற்று டெல்லி அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. டீகாக் மற்றும் முரளி விஜய் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். டீகாக் 24 ரன்களும், முரளி விஜய் 35 ரன்களும் எடுத்தன.ர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பீட்டர்சன் முதல் பந்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் சுதாரிப்பாக விளையாடி 36 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களுக்கு 178 ரன்கள் குவித்தது.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சென்னை அணி, எவ்வித பதட்டமும் இன்றி 19.5 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர் ஸ்மித் 79 ரன்களும்,சுரேஷ் ரெய்னா 47 ரன்களும், மெக்கல்லம் 32 ரன்களும் எடுத்தனர். வழக்கம்போல் வின்னிங் ஷாட் அடித்த கேப்டன் தோனி 5 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்னை அணியின் அபார வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் சென்னை முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

Leave a Reply