டிசம்பர் 23 வரை திடீர் விடுமுறை அறிவிப்பு

குடியுரிமை சீர்திருத்த சட்ட மசோதா கடந்த வாரம் மக்களவை மற்றும் மாநிலங்களவை நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது

டெல்லி மற்றும் வட மாநிலங்களிலும் பரவிய இந்த போராட்டம் தற்போது தென் மாநிலங்களிலும் பரவிவிட்டது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து இருப்பதாக தெரிகிறது

இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை என அதிரடியாக அறிவித்தது. இதனை அடுத்து தற்போது சென்னை பல்கலைக் கழகமும் டிசம்பர் 23-ஆம் தேதி வரை விடுமுறை என அறிவித்துள்ளது

அதுமட்டுமின்றி விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. மாணவர்களுக்கு விடுமுறை அளித்து ஊருக்கு அனுப்பி விட்டால் போராட்டம் முடிவுக்கு வரும் என்று கருதியே பல்கலைக் கழக நிர்வாகிகள் விடுமுறை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply