சென்னை பயிற்சி டாக்டர் திடீர் தற்கொலை

மெரினாவில் ஒதுங்கிய பிணம்

சென்னை பயிற்சி டாக்டர் ஒருவர் மெரினா கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த பயிற்சி டாக்டர் ஒருவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது

இந்த நிலையில் திடீரென அவர் தனது காரை மெரினா கடற்கரைக்கு ஓட்டி வந்து, கலங்கரை விளக்கம் அருகே காரை நிறுத்திவிட்டு மெரினா கடற்கரைக்கு சென்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது அவருடைய பிணம் சில மணி நேரங்களில் ஒதுங்கி இதையடுத்து போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்

தற்கொலைக்கு முன் அவர் தனது வாட்ஸ்அப் மூலம் தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.