கொரோனா தாக்கம்: சென்னை-குவைத் விமானங்கள் ரத்து

சீனா முழுவதும் ஆக்கிரமித்த கொரோனா வைரஸ் அதன் பின்னர் அண்டை நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவிய நிலையில் தற்போது இந்தியாவிலும் பரவி விட்டது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. குறிப்பாக வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வரும் நபர்களுக்கு கொரோனா தாக்கம் இருப்பதாக தெரிகிறது

இந்த நிலையில் சென்னையில் இருந்து குவைத் செல்லும் ஏர் இந்தியா மற்றும் இன்டிகோ விமானங்கள் ஏற்கனவே நேற்று ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் சென்னையில் இருந்து குவைத் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா தாக்கம் காரணமாக இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply