சென்னை-டெல்லி ரயில்கள் திடீர் ரத்து: என்ன காரணம்?

கனமழை காரணமாக சென்னையில் இருந்து டெல்லி செல்லும் 5 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களில் ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன

இந்த நிலையில் சென்னையிலிருந்து டெல்லி வரை செல்லும் 5 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம் பின்வருமாறு:

1. வண்டி எண் (12616): டெல்லி-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில்

2. வண்டி எண் (12626); டெல்லி-திருவனந்தபுரம் விரைவு ரயில்

3. வண்டி எண் (12270): டெல்லி ஹசரத் நிஜாமுதீன்-சென்னை சென்ட்ரல்

4. வண்டி எண் (12622): டெல்லி – சென்னை சென்ட்ரல்விரைவு ரயில்

5. வண்டி எண் (12655): அகமதாபாத் – சென்ட்ரல் விரைவு ரயில்