shadow

சென்னையிலிருந்து அந்தமான் செல்ல இருந்த 5 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

வங்ககடலில் ஏற்பட்ட அசான் புயல் அந்தமானை நெருங்கி வருவதாகவும் இதன் காரணமாக அந்தமானில் கனமழை பெய்து வருவதாகவும் கூறப்படுவதால் சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது

மேலும் அந்தமானில் உள்ள பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.