அந்தமானுக்கு விமான சேவை திடீர் ரத்து: பயணிகள் அதிர்ச்சி

அந்தமானுக்கு விமான சேவை திடீர் ரத்து: பயணிகள் அதிர்ச்சி

அந்தமானுக்கு விமான சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதன் காரணமாக பயணிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து அந்தமானுக்கு நவம்பர் 15 முதல் 18 வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

4 நாட்கள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் பயணிகள் பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்

விமான ஓடுபாதை பராமரிப்பு பணி காரணமாக சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.