shadow

fire chennai 1a

சென்னை தி.நகரில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடியின் இரண்டாவது மாடியில் இன்று காலை திடிரென தீவிபத்து நடந்தது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

சென்னை தி.,நகரில் துரைச்சாமி சாலையில் உள்ள பல்பொருள் அங்காடியின் இரண்டாவது மாடியில் அந்த நிறுவனத்தின் கழிவு பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் இன்று காலையில் திடீரென தீப்பிடித்தது. தகவல் தெரிந்தவுடன் உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த பரபரப்பு காரணமாக துரைச்சாமி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட்டுள்ளது. போக்குவரத்து போலீஸார் விரைந்து செயல்பட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.

தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

fire chennai 2a

Leave a Reply