வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ள 7வது ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலந்து கொள்வதில் தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தோனி உள்பட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் மருமகன் மீது சூதாட்ட புகார் குறித்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணை வர உள்ளது. அவர் மீதான் சூதாட்ட புகார் நிரூபிக்கப்பட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமம் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்  சூழ்நிலையில், பிகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆதித்யா வர்மா, சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் “ஐபிஎல் வீரர்கள் ஏலம், குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் மூவர் குழுவின் விசாரணை அறிக்கை மீது உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்கு உட்பட்டதுதான் என பிசிசிஐக்கு உத்தரவிடவேண்டும்” என்று தனது மனுவில் கேட்டுக்கொடுள்ளார்.

வரும் 12ஆம் தேதி ஐ.பி.எல். வீரர்களின் ஏலம் நடைபெற உள்ள நிலையில் இந்த மனு மீதான விசாரணை 10ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையை பொறுத்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எதிர்காலம் அறியப்படும்.

Leave a Reply