ஆசிரியர் திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற 10ஆம் வகுப்பு மாணவர்: அதிர்ச்சி தகவல்

பள்ளிக்கு தாமதமாக வந்ததாக ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த பத்தாம் வகுப்பு மாணவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலைக்கு முயன்றதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்பு ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பள்ளிக்கு தாமதமாக வந்ததாக மாணவர் ஒருவரை திட்டியதாக தெரிகிறது

இதனால் மனமுடைந்த அந்த மாணவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். சரியான நேரத்தில் கண்டுபிடித்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது