சினிமாவில் தோல்வி அடைந்த ஆர்யாவுக்கு கிரிக்கெட்டிலும் தோல்வி

சினிமாவில் தோல்வி அடைந்த ஆர்யாவுக்கு கிரிக்கெட்டிலும் தோல்வி

cclஆர்யாவின் படங்கள்தான் வரிசையாக தோல்வி அடைந்து வருகிறது என்றால் அவர் தலைமையிலான சென்னை ரினொஸ் அணியும் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது’

ஏற்கனவே சுதீப் தலைமையிலான கர்நாடக புல்டோசர் அணியிடம்  85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஆர்யாவின் சென்னை ரினோஸ் அணி, நேற்று தெலுங்கு வாரியர்ஸ் அணியுடன் மோதியது..

டாஸ் வென்ற ஆர்யா, பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை ரினோஸ் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்கள் எடுத்தது. விக்ராந்த் மிக அபாரமாக விளையாடி 64 பந்துகளில் சதமதடித்தார்.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய அகில் அக்கினி தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணி, 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published.