நாங்க துப்பனும்ன்னு நினைச்சோம். விஜயகாந்த் துப்பிவிட்டார். மனுஷ்யபுத்திரனின் சர்ச்சை பேச்சு

நாங்க துப்பனும்ன்னு நினைச்சோம். விஜயகாந்த் துப்பிவிட்டார். மனுஷ்யபுத்திரனின் சர்ச்சை பேச்சு

manushyaசமீபத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஜெயலலிதாவிடம் போய் இந்த கேள்வியை கேட்டு பாருங்களேன் என்று கூறியதோடு பத்திரிகையாளர்களை நோக்கி ‘தூ’வென துப்பினார். இதற்கு பத்திரிகையாளர்கள் தரப்பில் இருந்து கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை நடந்து வருகின்றது.

இந்நிலையில் பிரபல எழுத்தாளரும் சமீபத்தில் திமுகவில் இணைந்தவருமான மனுஷ்யபுத்திரன் மதுரை அருகே நடந்த ஒரு கூட்டத்தில் பேசியபோது, ‘முதலமைச்சரிடம் கேள்வி கேட்காத பத்திரிகையாளர் மீது கார்துப்பனும்னு நாங்கள் நினைத்தோம். ஆனால் விஜயகாந்த் துப்பிவிட்டார். விஜயகாந்த் செயல் பாராட்டுக்குரியது’ என்று கூறியுள்ளார்.

மனுஷ்ய புத்திரனின் இந்த பேச்சுக்கு சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்த கண்டன அறிக்கை பின்வருமாறு:

manushya

Leave a Reply

Your email address will not be published.