நள்ளிரவில் காவேரி மருத்துவமனைக்கு வந்த சென்னை காவல்துறை ஆணையர்

நள்ளிரவில் காவேரி மருத்துவமனைக்கு வந்த சென்னை காவல்துறை ஆணையர்

திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து தெரிந்து கொள்ள மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியுள்ளனர். போலீசார் லேசான தடியடி நடத்தியும் தொண்டர்கள் அந்த பகுதியை விட்டு அகலவில்லை

இந்த நிலையில் கருணாநிதியின் உறவினர்கள் ஒவ்வொருவராக மருத்துவமனையில் இருந்து அவரவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அந்த பகுதியின் சட்ட ஒழுங்கு குறித்து அவர் ஆய்வு செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சேலத்தில் இன்று பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னை வந்தடைந்தார் முதலமைச்சர் பழனிசாமி. அவர் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply