சென்னையில் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை: இருப்பினும் ஏமாற்றம்

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்றைய பெட்ரோல், டீசல் நிர்ணயிக்கப்பட்ட விலை குறித்து தற்போது பார்ப்போம்

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.73.33 ஆக விற்பனையாகிறது. இதுநேற்றைய விலையில் இருந்து 25காசுகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சென்னையில் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.66.75ஆக விற்பனையாகிறது. இது நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைவுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply