shadow

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி 30 முதல் 35 காசுகள் வரை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

சென்னையில் பெட்ரோல் விலை இன்று 31 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 103.92 ரூபாய் என விற்பனையாகி வருகிறது

சென்னையில் டீசல் விலை இன்று 33 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை 99.92 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது