நாளை முதல் மெட்ரோ ரயில் நேரமாற்ற அறிவிப்பு

நாளை முதல் மெட்ரோ ரயில் நேரம் மாற்றம் செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலை போக்குவரத்தில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் இயக்கம் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முதல் 12ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை கால அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும் என்றும், அதாவது நாளை முதல் காலை ஐந்து முப்பது மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்றும் ஒவ்வொரு நாளும் பத்து நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் படுத்திய அவர்கள் தெரிவித்துள்ளார்.