சென்னை மெட்ரோவில் இனி டோக்கன்கள் இல்லை!

சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில் இனிமேல் பயணிகளுக்கு டோக்கன்களுக்கு பதில் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு டோக்கனை மீண்டும் மீண்டும் மற்றவர்களும் பயன்படுத்துவதால் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து பாதுகாப்பு கருதி டோக்கன்கள் டிக்கெட் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது

இது குறித்த முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது